Saturday, November 11, 2006

ஈ.வெ.ரா ஏற்படுத்திய தாக்கம் !

பெரியார் குறித்து சமீபத்தில் (டோண்டுவின் "சமீபத்தில்" அல்ல:)) வாசித்தறிந்த இரண்டு நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன்:

நிகழ்வு ஒன்று:
----------------------
கஸ்தூரி ஸ்ரீநிவாஸன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிந்து நாளிதழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு முறை, மதச்சடங்குகளில் நம்பிக்கை இல்லாத அவரது மாமா ஒருவர், கஸ்தூரி அவர்களின் பால்ய வயதில், அவரை கோயமுத்தூரில் பெரியார் கலந்து கொண்ட அரசியல் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

பல வருடங்களுக்கு பின் அப்பேச்சை நினைவு கூர்ந்த கஸ்தூரி, "பெரியார் ஒரு திறமையான பேச்சாளர், தன் வாதத்திறமையால் கேட்பவரை கட்டிப் போடுவதிலும், சிந்திக்க வைப்பதிலும் வல்லவர் ! அன்று, பெரியார், 'கடவுள் என்ற ஒருவர் உண்மையில் இருந்தால், மின்சாரத்தையும் வானொலியையும் கண்டுபிடித்த மனிதன், இந்நேரம் அவரைக் கண்டு பிடித்திருப்பான் ! கடவுள் என்று எதுவும் இல்லை ! பார்ப்பனர் சக மனிதரை தமக்குக் கீழேயே வைத்திருக்கும் உபாயமாக, கடவுள் என்ற மூட நம்பிக்கையை கண்டு பிடித்தனர் ! நான் கூறுவது அக்கிரமமானது என்றால், அவர்கள் எனக்கு சாபம் தரட்டும். ஆனால், அச்சாபம் என்னை ஒன்றும் செய்ய முடியாது, ஏனெனில், நான் எதன் மேலும் குருட்டு நம்பிக்கை வைப்பது இல்லை' என்று முழங்கியவர், அதன் தொடர்ச்சியாக, 'என்னுடைய இந்தச் சவாலை இங்கிருக்கும் நாமம் போட்ட மடையன் யாராவது ஏற்கத் தயாரா ?' என்று அறைகூவலிட, நான் (கஸ்தூரி), அன்று நாமம் போட்டிருந்த காரணத்தால், தலையை தாழ்த்திக் கொண்டேன்!" என்று கூறியிருக்கிறார்.

பெரியாரின் அப்பேச்சு ஏற்படுத்திய தாக்கம் குறித்து கஸ்தூரி கூறுகையில், " அன்றிலிருந்து நான் கோயிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன் ! நாமம் அணிவதில்லை ! கடவுள் பெயரால் உபவாசம் இருப்பதில்லை ! கேட்க விருப்பமுள்ளவர் பலரிடமும் பெரியாரின் கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கத் தொடங்கினேன். அத்தோடு நில்லாமல், எனது இந்த 'சுய விடுதலை'யை பறைசாற்ற நான் மிகவும் வெறுத்த புலால் உணவை உண்ண ஆரம்பித்தேன் ! அதுவே நான் புதிதாக உணர்ந்த சுதந்திரத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழியாக எனக்கு புலப்பட்டது" என்றும் சொல்லியுள்ளதை வாசிக்கும்போது, வாசிப்பவர்க்கு ஒரு வித பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்படலாம். அதாவது, கடவுள் நம்பிக்கை மிக்க, ஓர் ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் மீது பெரியாரின் பேச்சு எந்த அளவு தாக்கத்தை உண்டு பண்ணியது என்பதை பார்க்கும்போது !!!


நிகழ்வு இரண்டு:
------------------------
பெரியார் அறிஞர் அண்ணாவுடன் ஒரு மேடைப் பேச்சுக்காக, 1944-இல், சிதம்பரம் அருகில் உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார். அவரது அன்றைய மேடை முழக்கத்திற்குப் பின் எதிர்பார்க்க முடியாத வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்தன ! மொத்த கிராமமும் நாத்திகத்தைத் தழுவியது ! கிராமத்திலிருந்த வேணுகோபால சுவாமி திருக்கோயில் மூடப்பட்டது. கிராமத்தில் இருந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டு விக்ரகம் ஏரியில் வீசி எறியப்பட்டது ! கிராம மக்கள் அனைத்து மதச்சடங்குகளையும் துறந்தனர் ! இன்று கூட, அக்கிராமத்தில் பார்ப்பனரில்லா சுயமரியாதைத் திருமணங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. அது போலவே, ஈமச் சடங்குகளும் யாரும் செய்வது கிடையாது.

மேற்கூறிய இரண்டும் அசாதாரண நிகழ்வுகளும், ஈ.வெ.ரா என்ற தனி மனிதரின் (இயக்கத்தை இத்துடன் இணைக்க விரும்பவில்லை!) அரசியல் பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் வீரியத்தை விளக்குவதற்கு மட்டுமே ! ஈ.வெ.ரா (தனி மனித வாழ்க்கையில் அவரும் பல தவறுகள் செய்திருந்தாலும், சமயங்களில், அவருக்கு அப்போது மக்கள் அளித்த ஆதரவின் போதையில் எல்லை மீறிய அபத்தச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும்!) ஒரு நல்ல சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர் என்பதற்கு சான்றாக இவ்விரு நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது !

எ.அ.பாலா

#$% 257 #$%

38 மறுமொழிகள்:

said...

//தனி மனித வாழ்க்கையில் அவரும் பல தவறுகள் செய்திருந்தாலும், சமயங்களில், அவருக்கு அப்போது மக்கள் அளித்த ஆதரவின் போதையில் எல்லை மீறிய அபத்தச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும்!//

:-)))))))))))))
குத்து..குத்து.. இந்த குத்து என்ன வகை குத்து?

அருண்மொழி said...

//தனி மனித வாழ்க்கையில் அவரும் பல தவறுகள் செய்திருந்தாலும், //

அவர் மனிதன். தவறே செய்யாத தெய்வமில்லை.அவர் பிரச்சாரத்தின் மைய கருத்து மனிதநேயம். அனைத்து மனிதரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே. அதற்கு தடையாக/இடையூராக எது வந்ததோ அதை கடுமையாக எதிர்த்தார்.

மிதக்கும்வெளி said...

நீங்கள் முதலில் குறிப்பிட்டுள்ள சம்பவம் பெரியார் பிறந்தநாளன்று இந்துவிலோ எக்ஸ்பிரஸிலோ வந்த கட்டுரை என்று நினைக்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

சரிங்க பாலா,

மூடநம்பிக்கையை விடுன்னு சொன்ன ஈவேராவை எல்லாவிதமாகவும் மூடத்தனத்தோடு பின்பற்றி உன்மத்ததுடன் ஒரு தனி மதமாக நிறுவிக்கொண்டிருப்பது எதிர்மறைத்தாக்கம் தானுங்களே!

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல பதிவு பாலா.

பேச்சு, பிரசாரத்தின் தாக்கம் பிரம்மாண்டமானது. இப்பதிவு அதை மீண்டும் உணர்த்துகிறது.

enRenRum-anbudan.BALA said...

குசும்பான குத்து வாங்கியவரே,
//குத்து..குத்து.. இந்த குத்து என்ன வகை குத்து?
//
இல்லாத குத்தை நீங்களாக கற்பனை செய்தால் நான் பொறுப்பல்ல :)))

enRenRum-anbudan.BALA said...

அருண்மொழி,
வருகைக்கு நன்றி !

மிதக்கும் வெளி,
நன்றி.
//நீங்கள் முதலில் குறிப்பிட்டுள்ள சம்பவம் பெரியார் பிறந்தநாளன்று இந்துவிலோ எக்ஸ்பிரஸிலோ வந்த கட்டுரை என்று நினைக்கிறேன்.
//
நீங்கள் கூறுவது சரியே !

enRenRum-anbudan.BALA said...

ஹரிஹரன்,
//மூடநம்பிக்கையை விடுன்னு சொன்ன ஈவேராவை எல்லாவிதமாகவும் மூடத்தனத்தோடு பின்பற்றி உன்மத்ததுடன் ஒரு தனி மதமாக நிறுவிக்கொண்டிருப்பது எதிர்மறைத்தாக்கம் தானுங்களே!
//
இவர்களைப் போன்றவரே ஈ.வெ.ரா வின் உண்மையான எதிரிகள். தங்களுக்கு மேலே இருப்பவரை (இருப்பதாக கூறிக் கொண்டு) தீவிரமாக எதிர்த்துக் கொண்டு, தங்களுக்கு கீழே இருப்பவரை மிதித்துக் கொண்டு (அல்லது லட்சியம் செய்யாமல் நடந்து கொண்டு), பெரியாரின் கொள்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் !

enRenRum-anbudan.BALA said...

Dear Suresh,
//நல்ல பதிவு பாலா.

பேச்சு, பிரசாரத்தின் தாக்கம் பிரம்மாண்டமானது. இப்பதிவு அதை மீண்டும் உணர்த்துகிறது.
//
Thanks, BOSS :)

ஜோ/Joe said...

பதிவுக்கு நன்றி பாலா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தேங்கத் தேங்கத் தோன்றும் கசடுகளைக் காட்டாற்று வெள்ளம் போல் வந்து ஒரேயடியாக அடித்துச் சென்ற பெரியார் என்னும் மாமனிதருக்கு, நம் தர்மமும் கடமைப்பட்டுள்ளது!

அவர் காலத்தினால் செய்த உதவி பலப்பல!
அது ஞாலத்தின் மாணப் பெரிது!

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்!:-)

Unknown said...

நான் இதுவரை அறிந்திராத சம்பவங்கள். நன்றி பாலா

enRenRum-anbudan.BALA said...

Comment from an ANONY is edited and posted by Administrator
**************************
There is nothing surprise in Kasthoori's lunatic behaviours, his descendant Ram is an example for that. ####### Edited by Administrator ########
*******************************
Publish Reject (Anonymous) 3:42 AM

enRenRum-anbudan.BALA said...

Anony,

Your comment WOULD NOT HAVE BEEN EDITED if you had posted your comment with your true identity !!!

Just for your kind information !

enRenRum-anbudan.BALA said...

Kannabiran, Joe,

வருகைக்கு நன்றி !

enRenRum-anbudan.BALA said...

பெயர் போட பயந்து ஓடி ஒளியும் 'கோழை' அனானி நண்பரே,

மேலே அனானியை அவ்வாறு குறிப்பிட்டதற்கு காரணம் உண்டு. அவர் இன்னொரு கீழ்த்தரமான கமெண்டை அனுப்பி, அது என் பார்வைக்கு மட்டும் என்று கூறி, என்னையும் இன்னும் சிலரையும் (அவராக சிலவற்றை கற்பனை செய்து கொண்டு) தலைக்கேறிய ஆத்திரத்தில், சித்தம் கலங்கி, திட்டித் தீர்த்துள்ளார் ! என்னைப் பற்றி, இங்குள்ள வலையுலக நண்பர்களுக்குத் தெரியும். அனானி யார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது, ஆனால் பெயரை வெளியிட்டு பிரச்சினையை பெரிதாக்க இஷ்டமில்லை

அவருக்கு என் பதில்:

இந்தப் பதிவின் பேசும் பொருள் பெரியார், கஸ்தூரி மற்றும் பூந்தோட்ட கிராமத்தார். அவை குறித்து கருத்து இருந்தால், விவாதம் செய்யலாம் ! நானோ, (நீங்கள் கூறும் "என்னைப் போன்ற") பதிவர்களோ அல்ல !

உங்கள் கமெண்டை எடிட் செய்ததற்கு காரணம் -- Just to encourage you to 'come out clean' with your true identity so that people here can understand the true colors of the person commenting on others' actions !!!

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. பதிவு பற்றி மட்டும் பேசலாம். நன்றி.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

On second thoughts, I thought I could publish "angry" anony's comment after editing suitably !!!

Anony's edited comment below
#############################
பாலா

நீங்கள்
மட்டுறுத்தியது
பற்றி கவலை இல்லை.
உங்களுக்குத் தெரிய
வேண்டும்
என்பதற்காகத்தான்
அதைச் சொன்னேன்.
உதாரணமாக சு
வடிவேலின்
அப்பட்டமான பிராமண
எதிர்ப்புணர்வுக்கு
நீங்களும்,
*** edited ****
போய்ஜால்ரா
போட்டிருப்பது மகா
வெக்கக்கேடானதும்,
முதுகெலும்பில்லாததொரு
செயலும் ஆகும்.
**** edited ****
உங்களை அவர்கள்
வெறுக்கப் போவது
நிற்கப் போவதில்லை.
அந்தப் பதிவு ஒரு
*** edited ****
ஒரு வெறுப்புப் பதிவு
என்று தெரிந்த
போதிலும் போட்டிப்
போட்டுக் கொண்டு
*** edited ****
ஜால்ரா போட்ட உங்கள்
செய்கை மிகவும்
கீழ்த்தரமானதாகும்.
அதைத்தான் இந்து
கஸ்தூரியும் நக்சல்
ராமும் செய்து
வருகின்றனர். எங்கே
பிறர் நம்மை
பிராமணர்
என்பதற்காகத்
தாக்கி விடுவார்களோ
என்ற அச்சத்தில்,
கோழைத்தனத்தில்,
வேகமாக ஓடிப் போய்
வெறுப்பு என்னும்
விஷத்தை
உமிழுபவர்களை ஓடிப்
போய்த் தழுவிக்
கொள்வீர்கள்.
**** edited*****
உங்கள்
மீது கடும்
அதிருப்தியிலும்,
கோபத்திலும்
உள்ளேன்,
**** edited ****
கொஞ்சமாவது
முதுகெலும்பு
வளத்துக் கொள்ளப்
பாருங்கள்.
*** edited ****
உங்களுக்கு என்ன
கேடு வந்தது?
(Anonymous) 11:09 AM
#####################

said...

அனானி உளறுவதை விட்டுத் தள்ளுங்கள்

said...

//உங்கள்
மீது கடும்
அதிருப்தியிலும்,
கோபத்திலும்
உள்ளேன்,
//
அனானி ஐயா யாரோ ஒரு ஆளு,
இவருக்கு பாலா மேல கடுங்கோபமுன்னு சொல்றது சம்ம காமெடியா இருக்கு :)))

said...

Kasthuri srinivasan, founder of
THE HINDU-is it correct? please check up

Bajji(#07096154083685964097) said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

Cervantes,

Thanks for your views. I have removed the last paragraph of your comment (as it is a personal question put to me) and I am publishing your edited comment below. If you send an email to me, I could explain my position if you care to listen.
*****************************
Cervantes said...
உங்கள் வருத்தத்தைப் புரிந்து கொள்கிறேன் எ.அ. பாலா. நீங்கள் அனானி பின்னூட்டத்தின் எடிட் செய்தப் பகுதிகளை என்னால் பார்க்க இயலாவிடினும் அவை கடுமையான சொற்களில் இருந்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

ஆனாலும் என்னால் ஒன்று கூறாமல் இருக்க முடியவில்லை. நீங்கள் ரொம்பத்தான் bending backwards என்று தோன்றுகிறது.

சுந்தரவடிவேல் பதிவில் அந்தப் பார்ப்பனர் செய்ததை குறை கூறியிருந்தீர்கள், ஆனால் அதே சமயம் சுந்தர வடிவேலுவும் இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு சகட்டு மேனிக்கு பார்ப்பன சமுதாயத்தையே இழிவுபடுத்தியதை பற்றி நீங்கள் ஒரு வார்த்தையும் கூறாதது ஏன்?

நான் பார்ப்பனன் இல்லைதான், ஆனாலும் எனக்கே இது சரியாகப் படவில்லை. நீங்கள் அதை விழுங்கிக் கொண்டது ஏன்?

அப்படிச் செய்வதால் உங்களுக்கு யாரும் மெடல் ஏதேனும் கொடுக்கப் போவதில்லை. எனக்கென்னவோ, "பார் நான் எவ்வளவு fair ஆக நடந்து கொள்கிறேன்" என்று காட்டிக் கொள்ள முயல்வது போல பட்டது.

******* edited *********

கிருஷ்ணன்
*****************************

naathigan said...

Friend

Its clearly evident from the message you posted that right great personalities to common man came forward to understand & to accomodate change. Must be about 60 yrs back ??

But the fact is till today 70 % of the educated, elite class people doesnt accept change only in this social perspective.

If we closely look them they have changed in all the walks of life other than this.

What is the message such people give is what gandhi told to Communist JEEVA on that day still exists on Gandhian philosophy.

Moreover the periyar followers also bowed down considerably and out of track.

I am sure the real Dravidian culture will be in place for my Kith & kin.

Thanks for your commendable post

balan
bala_balan@yahoo.com

Bajji(#07096154083685964097) said...

எடிட் செய்வது உங்கள் உரிமை எ.அ.பாலா அவர்களே. எப்போதுமே நான் பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்பவன்தான். ஆனால், அதற்காக நான் மெயில் எல்லாம் போடப் போவதில்லை.

லியோ மோகனுக்காக ஒரு பதிவை போடப் போகிறேன். அதில் உங்கள் விஷயமும் பொருந்துவதால் நான் உங்களுக்கிட்ட முழு பின்னூட்டத்தையும் அதில் இடுவேன். ஒரே ஒரு உதவி செய்யுங்கள். எடிட் ஆன பகுதியை எனது நினைவிலிருந்துதான் தர வேண்டியிருக்கும். அதில் ஏதேனும் பிழை இருப்பின் அதை குறிப்பிட்டு கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

கிருஷ்ணன்

enRenRum-anbudan.BALA said...

Krishnan,

இது உங்களுக்கும், இதே கேள்வியை கேட்க நினைத்த இன்ன பிறருக்கும்:

சு.வ. வின் பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் சற்று இடறியது ! அவர் பொதுமைப்படுத்தியது தவறானது தான். அதற்குக் கண்டனம் தெரிவிக்காததற்குக் காரணங்கள் உண்டு.

1. துக்கத்தில் இருப்பவரிடம் அனுதாபங்களைத் தெரிவிப்பதை விடுத்து, விவாதம் செய்வது என்னளவில் வேண்டாத ஒன்றாக நான் கருதியது மட்டுமே. ஏற்கனவே, அங்கு சண்டை மண்டை உடைந்து கொண்டு தான் இருந்தது.

2. மேலும், பின்புல ஆராய்ச்சிக் கூட்டம் ஒன்றுக்கு, ஏற்கனவே மென்று கொண்டிருக்கும் வாய்க்கு, அவல் தர இஷ்டமில்லை !

அடுத்து, நான் "fair mainded" என்று இங்கு யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் நிச்சயம் கிடையாது. என் கருத்துக்களை / எழுதுவதை வைத்து, என்னைப் புரிந்த நண்பர்கள் இங்கு உண்டு. புரியாதவரை / புரிந்து கொள்ள விருப்பமில்லாதவரை பற்றி அக்கறையும் இல்லை.

நான் கடந்த இரண்டரை வருடங்களாக வலை பதிகிறேன். பல விஷயங்களில் இடறியும், விழுந்தும், தாண்டியும் தான் வந்திருக்கிறேன் ! எந்த விஷயத்திலும் எனக்கென்று கருத்து / செயல் உள்ளது. அதை எல்லாரிடமும் விளக்கிக் கொண்டிருக்க இயலாது. சிலரிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி !

எ.அ.பாலா

லக்கிலுக் said...

//கஸ்தூரி ஸ்ரீநிவாஸன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிந்து நாளிதழைத் தொடங்கியவர்.//

ஹிந்து நாளிதழ் ஆறு பேர் கொண்ட குழுவால் 1878ல் ஆரம்பிக்கப்பட்டது. கஸ்தூரி சீனிவாசன் அவர்களால் அல்ல.

ஜி. சுப்ரமணிய ஐயர், எம். வீரராகவாச்சாரியார், டி.டி. ரங்காச்சாரியார், பி.வி. ரங்காச்சாரியார், டி. கேசவராவ், என். சுப்பாராவ் ஆகிய அறுவர் தான் அவர்கள்.

enRenRum-anbudan.BALA said...

செல்வன், naathigan,
வருகைக்கு நன்றி.

லக்கி லுக்,
வாங்க, தவறை சுட்டியமைக்கு நன்றி. I will correct it !
பதிவைப் பத்தி கமெண்ட் ஒண்ணும் கிடையாதா ???
எ.அ.பாலா

said...

பாலா சார்,

/////////
Cervantes said...
எடிட் செய்வது உங்கள் உரிமை எ.அ.பாலா அவர்களே. எப்போதுமே நான் பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்பவன்தான். ஆனால், அதற்காக நான் மெயில் எல்லாம் போடப் போவதில்லை.

லியோ மோகனுக்காக ஒரு பதிவை போடப் போகிறேன். அதில் உங்கள் விஷயமும் பொருந்துவதால் நான் உங்களுக்கிட்ட முழு பின்னூட்டத்தையும் அதில் இடுவேன். ஒரே ஒரு உதவி செய்யுங்கள். எடிட் ஆன பகுதியை எனது நினைவிலிருந்துதான் தர வேண்டியிருக்கும். அதில் ஏதேனும் பிழை இருப்பின் அதை குறிப்பிட்டு கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

கிருஷ்ணன்
//////////
சர்வான்டஸ் என்ற நபரின் எழுத்து நடை டோ ண்டு ராகவன் நடையுடன் ஒத்துப் போகிறது. இது தற்செயலானதா? இது போன்ற ஆட்களுக்கும் அனானிகளுக்கும் வேலை மெனக்கெட்டு தன்னிலை விளக்கம் வேறு அளிக்கிறீர்கள் ... பலரிடமும் நட்பாக பழகும் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி?

தங்களை முட்டாள் ஆக்குவது போல் தெரிகிறது. ஒரு நல்ல எண்ணத்தில் கூறினேன்... தவறாக நினைக்க வேண்டாம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் போல நல்ல பதிவுகளை தாருங்கள்

said...

//ஈ.வெ.ரா (தனி மனித வாழ்க்கையில் அவரும் பல தவறுகள் செய்திருந்தாலும், சமயங்களில், அவருக்கு அப்போது மக்கள் அளித்த ஆதரவின் போதையில் எல்லை மீறிய அபத்தச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும்!) ஒரு நல்ல சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர் என்பதற்கு சான்றாக இவ்விரு நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது !
//
You are right

enRenRum-anbudan.BALA said...

Test !

லக்கிலுக் said...

பதிவினைப் பற்றிய என்னுடைய விமர்சனம் :

//மேற்கூறிய இரண்டும் அசாதாரண நிகழ்வுகளும், ஈ.வெ.ரா என்ற தனி மனிதரின் (இயக்கத்தை இத்துடன் இணைக்க விரும்பவில்லை!) அரசியல் பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் வீரியத்தை விளக்குவதற்கு மட்டுமே ! ஈ.வெ.ரா (தனி மனித வாழ்க்கையில் அவரும் பல தவறுகள் செய்திருந்தாலும், சமயங்களில், அவருக்கு அப்போது மக்கள் அளித்த ஆதரவின் போதையில் எல்லை மீறிய அபத்தச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும்!) ஒரு நல்ல சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர் என்பதற்கு சான்றாக இவ்விரு நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது !//

ஒரு சிந்தனையாளரைப் போற்ற ஒரு பதிவு போட்டிருந்தாலும் அடைப்புக்குறிக்குள் நீங்கள் சொல்லியவை தலைமுறை தலைமுறையாக உங்கள் உடலில் ஊறிய ஜீன்களின் வேலை......

Bajji(#07096154083685964097) said...

பாலா,

ஆர்வக்கோளாறில் மடத்தனமாக எழுதியதற்கு மன்னிக்கவும். ஓரிரு நாள் கழித்துத்தான் எனக்கு இப்பின்னூட்டம் கொடுக்கும் தைரியம் வந்தது.

மற்றப்படி டோண்டு சாரின் எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டதால் என்னை அறியாமலேயே அவர் ஸ்டைலை காப்பியடித்திருக்கிறேன் போலிருக்கிறது. அதனால் அவருக்கு வேறு கெட்டப் பெயர். பல பின்னூட்டங்கள் எனக்கு இது சம்பந்தமாக வந்தன.

இனிமேல் உங்கள் பதிவுக்கு வந்து தொந்திரவு செய்ய மாட்டேன்.

கிருஷ்ணன்

சீனு said...

//நான் இதுவரை அறிந்திராத சம்பவங்கள். நன்றி பாலா//
அதே! அதே!!

/////
//மூடநம்பிக்கையை விடுன்னு சொன்ன ஈவேராவை எல்லாவிதமாகவும் மூடத்தனத்தோடு பின்பற்றி உன்மத்ததுடன் ஒரு தனி மதமாக நிறுவிக்கொண்டிருப்பது எதிர்மறைத்தாக்கம் தானுங்களே!
//
இவர்களைப் போன்றவரே ஈ.வெ.ரா வின் உண்மையான எதிரிகள்.
/////
அவர் சொன்னது தப்பில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

//அனானி யார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது, ஆனால் பெயரை வெளியிட்டு பிரச்சினையை பெரிதாக்க இஷ்டமில்லை//
பரவாயில்லை. ஒரு கிசுகிசுவாக போடுங்களேன்...

//துக்கத்தில் இருப்பவரிடம் அனுதாபங்களைத் தெரிவிப்பதை விடுத்து, விவாதம் செய்வது என்னளவில் வேண்டாத ஒன்றாக நான் கருதியது மட்டுமே.//
நானும் உங்களை ஆமோதிக்கின்றேன் (ஆனா, முன்னமே நான் கமென்ட் போட்டுட்டேன்).

enRenRum-anbudan.BALA said...

//
சீனு said...
//நான் இதுவரை அறிந்திராத சம்பவங்கள். நன்றி பாலா//
அதே! அதே!!
//
nanRi !
//
//அனானி யார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது, ஆனால் பெயரை வெளியிட்டு பிரச்சினையை பெரிதாக்க இஷ்டமில்லை//
பரவாயில்லை. ஒரு கிசுகிசுவாக போடுங்களேன்...
//
No .. No .. No ;-))))

Lucky look,
//ஒரு சிந்தனையாளரைப் போற்ற ஒரு பதிவு போட்டிருந்தாலும் அடைப்புக்குறிக்குள் நீங்கள் சொல்லியவை தலைமுறை தலைமுறையாக உங்கள் உடலில் ஊறிய ஜீன்களின் வேலை......
//
Sorry for commenting in English ! Thanks for your response.
When Periyar's followers themselves accept that he had made mistakes in his personal life, if I just point out the same thing, you cast aspersions on me and start doing genetic research, Great !
I am disappointed by your approach, that is all !!!

//இனிமேல் உங்கள் பதிவுக்கு வந்து தொந்திரவு செய்ய மாட்டேன்.

கிருஷ்ணன்
//
Thanks !

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
(தனி மனித வாழ்க்கையில் அவரும் பல தவறுகள் செய்திருந்தாலும், சமயங்களில், அவருக்கு அப்போது மக்கள் அளித்த ஆதரவின் போதையில் எல்லை மீறிய அபத்தச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும்!)
///

இந்தப் பதிவின் நோக்கம் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல

"அரசியல் பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் வீரியத்தை விளக்குவதற்கு மட்டுமே"

என்றால் இந்த வார்த்தைகள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லை இந்த சம்பவத்தையும் சொல்லி அவரை அப்படியே ஒரு திட்டும் திட்டி விடலாம் என்றால் "மட்டுமே" என்பதை தவிர்த்திருக்கலாம். இதனால் இந்தப் பதிவு எனக்கு நேர்மையானதாக தோன்றவில்லை.

enRenRum-anbudan.BALA said...

Senthil,
Thanks for your comments !

Hope you read my reply to Lucky look !!!!

enRenRum-anbudan.BALA said...

செந்தில்,
I rejected your comment accidentally ! Sorry. I am publishing it below !

****************************
I read your comments even before posting mine. I am not a periyar follower by any means, I do accept periyar is not a perfect gentleman. What i wanted to point out was u were saying that this post was meant to show periyar's speaking abilities but if that is the case the words u used looked like to me as a cheap shot.

Again I am just giving my point of view and I not claiming that I am right.

Posted by செந்தில் குமரன் to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 11/17/2006 10:48:56 AM
*****************************

enRenRum-anbudan.BALA said...

Senthil,

I accept your point of view though I may not agree to it !

Thanks.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails